வெறும் 1.8% வாக்குகளை மட்டும் அதிகம் பெற்று கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

Big Congress gains with just 2% vote share rise
பெங்களூர்: கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் இந்தத் தேர்தலில் வெறும் 1.8 சதவீதம் தான் அதிகரித்துள்ளது. ஆனாலும் இதன்மூலம் அந்தக் கட்சி 41 இடங்களை அதிகமாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த முறை 34.59% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் இந்த முறை 36.3% வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதற்காக காங்கிரஸ் மகிழ்ச்சியில் திளைக்க முடியாது. காரணம், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இதே அளவிலான (36.3%) வாக்குகளைப் பெற்றால் அந்தக் கட்சிக்கு 15 இடங்கள் கூட கிடைக்காது (கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன).

அதே நேரத்தில் ஆளும்கட்சியாக இருந்த பாஜக 14 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. இதற்கு எதியூரப்பா பிரிந்து சென்று தனிக் கட்சி ஆரம்பித்தது மட்டுமே காரணமல்ல என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 10 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. இதனால் மேலும் 4 சதவீத வாக்குகளை பாஜக வேறு காரணங்களால் தான் இழந்துள்ளது.

அதில் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுவது பாஜகவில் நிலவிய கோஷ்டிப் பூசல், ஸ்தம்பித்துப் போன நிர்வாகம், ஊழல் புகார்கள், நில மோசடிகள் ஆகியவை.

கடந்த தேர்தலில் 33.9 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இந்தமுறை 20 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. மொத்தத்தில் அந்தக் கட்சி 14 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எதியூரப்பா பாஜகவில் இருந்திருந்தால் கூட அந்தக் கட்சிக்கு கடந்த தேர்தலை விட 4 சதவீத வாக்குகள் குறைவாகவே கிடைத்திருக்கும். அப்போதும் கூட பாஜக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதே நேரத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் கிட்டத்தட்ட பாஜகவுக்கு இணையாக 20.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தக் கட்சி கடந்த தேர்தலில் பெற்றதை விட 1.1 சதவீதமே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

பாஜகவுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது மும்பை-கர்நாடகப் பகுதி, ஹைதராபாத்-கர்நாடகப் பகுதி ஆகிய வட மேற்கு, வட கிழக்கு கர்நாடகப் பகுதிகள் மற்றும் மத்திய கர்நாடகம், கூர்க் உள்ளிட்ட மலநாடு பகுதிகள் தான்.

இங்கு எதியூரப்பாவின் கட்சி முறையே 10.3%, 14.2%, 19.8%, 16.8% சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதிகளில் தான் 104 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பெருவாரியாக வசிக்கும் லிங்காயத்து சமூகத்தினரின் வாக்குகளை எதியூரப்பா பிரித்து எடுத்துச் சென்றுவிட்டார்.

அதே நேரத்தில் கடலோரக் கர்நாடகம், உடுப்பி ஆகிய பகுதிகளில் பாஜகவுக்கு 7 சதவீத வாக்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு எதியூரப்பாவுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்த வாக்கு சரிவு, பாஜக ஆட்சி மீதான கோபத்தில் ஏற்பட்டுள்ளது.

அதே போல மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடகப் பகுதிகளிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் 27.5 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக சரிந்துவிட்டது. இங்கு பெருவாரிய வாக்குகளை காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் வாரிக் கொண்டுவிட்டன. 87 தொகுதிகளைக் கொண்ட இந்தப் பகுதியில் பாஜகவுக்கு பெரும் தோல்வியே கிடைத்துள்ளது.

அதே போல ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் அந்தக் கட்சி பெல்லாரி, ராய்ச்சூர், கதக், பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 7 சதவீதம் அளவுக்கு பாஜகவின் வாக்குகளை பிரித்துவிட்டது. இதனாலும் பாஜக பல தொகுதிகளை இழந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+