கர்ப்பிணியை ஈவ் டீசிங் செய்த கல்லூரி மாணவர்கள் கைது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கர்ப்பிணிப் பெண்ணை ஈவ்டீசிங் செய்து தள்ளிவிட்ட மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவியாம்பாளையம், குட்டைப்பகுதியில் வேலை செய்துவிட்டு, பெண்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆனந்த், மனோகரன், பாலமுருகன், அருண்குமார் ஆகிய நான்கு பேரும் அந்த பெண்களை கிண்டலடித்தும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
அதில் முத்துலட்சுமியை நால்வரும் பின்புறமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துலட்சுமி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது குறித்து விசாரணை செய்த சேந்தமங்கலம் காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி நால்வரையும் 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் பரமத்திவேலூர் சிறார் பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications