கால்ஷீட் ஓகே... அதென்ன ’தலை’ஷீட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கேஸ்மை ஜோசப் என்ற அமெ­ரிக்க நபர் ஒருவர் தனது தலையை விளம்­ப­ரத்­திற்­காக பயன்படுத்தி வரு­கிறார். இவரை சுருக்­க­மாக கேஸ் என்று அழைப்­பார்கள்.

தலைக்கு மேல் ஆயிரம் வேலை என்ற பழமொழியை மெய்யாக்கியிருக்கிறார் இவர். 'கீரிப்புள்ள' ஹேர் ஸ்டைலோடு இவர் அமெரிக்காவில் செமத்தியாகக் கல்லா கட்டுகிறார். இவரின் நிஜப் பெயர் கேஸ்மை ஜோசப்.

இப்போது 25 விளம்பரங்களை மண்டையில் போட்டு சில்வர் ஜூப்ளி கொண்டாடிவிட்டார்.

 பேச்சுலர் பார்ட்டி...

பேச்சுலர் பார்ட்டி...

கேஸ் இப்படி முடி வெட்டக் காரணம் நண்­பனின் பெச்­சுலர் விருந்து தானாம். அந்த விருந்­துக்குப் போகையில், எதா­வது வித்­தி­யா­ச­மாகப் பண்ணி எல்­லோ­ரையும் திரும்பிப் பார்க்­க­வைக்­கணும் என்­று கேஸ் வெறித்­த­ன­மாக யோசித்தாராம்.

 ஆப்பிரிக்கன் பங்க்...

ஆப்பிரிக்கன் பங்க்...

'ஆப்பிரிக்கன் பங்க்' ஸ்டைலில் முடியை வெட்டி அப்படியே நெட்டுக்குத்தலாக ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணச் சொல்லி நண்பனின் பேச்சுலர் பார்ட்டிக்கு போனாராம் கேஸ். கூடுதலாக 'நண்பனின் பார்ட்டிக்கு எல்லோரும் வாங்க' என மண்டையில் ஹேர் ஸ்பிரேயில் டிஸைன் எழுத்தில் அட்ரஸோடு எழுதியும் வைத்துவிட... போட்ட திட்டம் பளிச்சுனு பலிச்சதாம்.

 வெல்கம் டு தி பார்ட்டி...

வெல்கம் டு தி பார்ட்டி...

பார்ட்டியின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனே கேஸின் மண்டைதான் என்றாக, கூட்டமும் பார்ட்டிக்கு நிறைய வந்தது. எல்லோரும் வரிசை கட்டி வந்து மண்டையைத் தடவிப்பார்க்க... ஆளும் குதூகலமாகிட்டாராம்.

 சூடு பிடித்த பிசினஸ்...

சூடு பிடித்த பிசினஸ்...

நண்பர்களும், 'இதையே பிசினஸ் ஆக்கிக்க கேஸ்' என அட்வைஸ் கொடுத்து சின்னதாகக் கடையும் போட்டுக்கொடுத்தனர். கூடவே, விளம்பர ஆர்டர்களும் நண்பர்களே பிடித்துக்கொடுக்க, ப்ளோரிடா மாகாணத்தில் பிரபலம் ஆகிட்டார் நம்ம கேஸ்.

 நடைபயணம்....

நடைபயணம்....

டெலிவர் லீன் என்ற கேட்டரிங் கம்பெனி உள்ளூர் கால் பந்தாட்டப் போட்டிக்கான விளம்பரத்தைத் தங்கள் சார்பாக இவர் மண்டையில் எழுதிவைக்கக் காசு கொடுத்தனர். சார்ஜ் வெறும் 1,200 டாலர்தானாம். அப்புறம் என்ன...? இந்த 'பங்க்' மண்டையின் விளம்பர அழகில் மயங்கி விளம்பர வாய்ப்புகள் குவிய ஆரம்பிச்சுருச்சாம்.

 ஓவர் பாப்புலர்...

ஓவர் பாப்புலர்...

''விளம்பரத்தை மண்டையில் டிஸைனாக போட்டுக்கொள்வதோடு என் பணி முடிந்துவிடவில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் என்னுடைய நடைப்பயண வீடியோவை அப்லோடு செய்து ஹிட்ஸ் அள்ளுகிறேன்.

 தலை சீட்...

தலை சீட்...

வாரம் ஒரு கம்பெனிக்கு என் மண்டையை 'தலை'ஷீட் கொடுத்துவந்தேன். இப்போதெல்லாம் வாரத்துக்கு மூன்று முறை விதவிதமாக டிஸைன் பண்ணி மூன்று வாடிக்கையாளர்களை அசத்துகிறேன்''

 நல்ல பொண்ணா சொல்லுங்கப்பா...

நல்ல பொண்ணா சொல்லுங்கப்பா...

''திரு­மணம் செய்­து­க்கொள்ள இந்த விளம்பர விஷயம் தடையாக இல்லாத பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னையும் என் மண்டையையும் புரிந்துகொண்ட ஒரு பெண் நிச்சயம் கிடைப்பாள்'' என்கிறார் சீரியஸாக!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+