தூத்துக்குடி அனல் மின்நிலையம்.. தொடரும் பாய்லர் பழுது- மின் உற்பத்தி மீண்டும் பாதிப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டின் பாய்லரில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்உற்பத்தியில் பாதிக்கப்பட்டிருக்கிறது..
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 210மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலைய மின்உற்பத்தி யூனிட்டுகள் அடிக்கடி பழுதாகுவதும், மின்உற்பத்தி பாதிக்கப்படுவதும் வாடிக்கையாவிட்டது.
கடந்த 8ந் தேதி தான் முதலாவது யூனிட்டின் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இந்த பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி சீராக நடந்து வந்த நிலையில், நேற்று இரவு மூன்றாவது யூனிட் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த யூனிட்டிற்கு நிலக்கரி கொண்டுவரும் பாதையிலும் பழுது ஏற்பட்டுள்ளது.
பாய்லர் பழுது, நிலக்கரி கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலைய பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டின் நேரம் அதிகரித்து வரும் சூழலில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் பழுதானது மின்வெட்டை அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறையால் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக பாய்லர்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications