ப்ளஸ் 2 தேர்வில் நெல்லை மாவட்டம் சாதனை… மாநில அளவில் 3வது இடம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பிளஸ்டூ தேர்வில் நெல்லை மாவட்டத்தில் ஓட்டு மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில் மூன்றாவது மாவட்டமாக முன்னேறியுள்ளது.

பிளஸ் டூ பொது தேர்வை நெல்லை மாவட்டத்தில் 259 பள்ளிகளில் 34645 மாணவ, மாணவிகள் எழுதினர். வழக்கம் போல் மாநில ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் நெல்லை மாவட்டத்துக்கு ஒரு மாநில ரேங்க் கூட கிடைக்காதது கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய 34645 பேரில் 32777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.61 சதவீத தேர்ச்சியாகும். இது கடந்த கல்வி ஆண்டை விட இந்த கல்வி ஆண்டு 1.5 சதவீதம் அதிக தேர்ச்சியாகும். கடந்த கல்வி ஆண்டில் 93.11 சதவீதம் மாணவ, மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதத்தில் நெல்லை மாவட்டம் 5ம் இடத்தில் இருந்தது. இப்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது மாவட்ட கல்வி துறை மற்றும் பள்ளிகள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி கூறுகையில், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களை கொண்டு பாட வாரியாக முக்கிய மாதிரி வினாக்கள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இது தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்றார்.

அரசுப் பள்ளிகள் 100க்கு 100

பிளஸ் பொது தேர்வில் நெல்லை மாவட்ட அளவில் பல பள்ளிகள் சாதனைகள் படைத்துள்ளன. இந்த கல்வி ஆண்டு 67 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 8 அரசுப்பள்ளிகள், 12 தனியார் பள்ளிகள், நகராட்சி, ஆதி திராவிடர் , சமூக நலத்துறை பள்ளிகள் தலா ஓன்று மற்றும் 44 மெட்ரிக் பள்ளிகள் அடங்கும்.

வெள்ளளங்குளி அரசு மேல்நிலைப்பளளி, பத்தமடை அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியபுரம், ஊர்மேல்அழகியான், சாம்பவர் வடகரை, காசிதர்மம், வீராணம், பாலமடை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளன.

100 சதவீத அரசு பள்ளிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட ஒன்று அதிகரித்துள்ளது. நகர்புற பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக முற்றிலும் இலவச கல்வி மூலம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 8 அரசு பள்ளிகளும் கிராமப்புறங்களில் செயல்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+