உங்களை உயிரோடு வந்து சந்திப்பேன்னு நினைக்கலை...: திருச்சி சிறை வாசலில் டாக்டர் ராமதாஸ் பகீர் பேட்டி!

மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி போராட்டம் நடத்தினார் டாக்டர் ராமதாஸ். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ராமதாஸ் மீது மாமல்லபுரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாக பேசியது, மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, மதுரை ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல், கூடங்குளத்தில் தடையை மீறியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது என அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று கூடங்குளம் வழக்கில் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் பெற்ற ராமதாஸ் 12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று காலை திருச்சி சிறையில் இருந்து விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சிறைக்குள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அறிவிக்கப்படாத, அறிவிக்க முடியாத ஒரு அவசரகால நிலை பாமக மீதும், வன்னிய சமுதாய மக்கள் மீதும் இந்த அரசு அறிவிக்காமல் அறிவித்திருக்கிறது. பாமகவினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த 12 நாட்களாக நான் சிறையில் இருந்தேன். உங்களை எல்லாம் மீண்டும் உயிரோடு வந்து சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார் என்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications