கர்நாடக முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்பு: விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Siddaramaiah
பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்றுக்கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறது. கர்நாடக முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகாவின் 28வது முதல்வராக அவர் நாளை பதவியேற்றுக் கொள்கிறார்.

பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள காண்டிரா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மைதானத்தில் நடந்து வருகிறது. மைதானத்தின் முன்பக்கம் உள்ள 2 நுழைவு வாயில்கள் வழியாக முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்பக்க வாயில்கள் வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த 2008ம் ஆண்டு எதியூரப்பா முதல்வராக பதவியேற்றபோது அந்த விழாவில் சுமார் 75,000 பேர் கலந்து கொண்டனர். தற்போது சித்தராமையா பதவியேற்பு விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் குமரகிருபா ரோட்டில் உள்ள சித்தராமையா வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவர் முதல்வராவதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும் கட்சி நிர்வாகிகள், திரை நட்சத்திரங்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று ஏராளமானோர் சித்தராமையாவை அவரது வீட்டில் வைத்து சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+