இம்ரான் கானுடன் இணைந்து ஆட்சி அமைப்பாரா ஷெரீப்?

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஆட்சியில் இருக்கும். இன்னொன்று எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால் முதல் முறையாக இதை உடைத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளார் இம்ரான் கான். இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதை நான் ஒப்புக் கொள்கிறேன். நவாஸ் ஷெரீப்பை பாராட்டுகிறேன் என்றார் அவர்.
தற்போது ஷெரீப் கட்சிக்கு 119 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிகிறது. இம்ரான் கட்சிக்கு 35 இடங்கள் வரை கிடைக்கலாம். 3வது இடத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளன.
ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை. எனவே ஷெரீப் கட்சிக்கு இன்னும் சிலரின் ஆதரவு தேவைப்படுகிறது. அதை இம்ரான் கானிடமிருந்து ஷெரீப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் துணைப் பிரதமர் பதவி போன்ற உயர்ந்த பதவி இம்ரானுக்குக்கிடைக்கக்கூடும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications