கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் காதல் ஜோடி மரணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் உமேஷ் பேகம் மற்றும் இவரது தங்கை ரஷ்யா பேகம். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்து ஆனவர்கள்.
அதன்பிறகு உமேஷ் பேகம் அதே பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரையும், ரஷ்யா பேகம், ரோஷன் என்பவரையும் காதலித்து வந்தனர்.இவர்கள் நான்கு பேரும் நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு சுற்றுலா வந்தனர்.
அணையை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் ஒரு இடத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரஷ்யா பேகம் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். கரைக்கு வரமுடியாமல் தத்தளித்த அவரை காப்பாற்ற சலீம் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் இருவரும் கரையேற முடியாமல் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சகோதரியும், அவரைக் காப்பாற்றச் சென்ற காதலரும் உயிரிழந்த சம்பவம் உமேஷ் பேகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்முன்னால் காதலி மூழ்கியது கண்டு ரோசனும் அதிர்ச்சியடைந்தார்.
அதன் பிறகு உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் இவர்கள் சடலம் மீட்கப்பட்டது. விரைவில் திருமணமாக இருந்த நிலையில் காதல் ஜோடிகளுக்கு சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications