அனைவரும் கொடைக்கானலை நோக்கி ஓடுங்கள்.. கோடை விழா வரப் போகிறது!

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: குளுகுளு கொடைக்கானலில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் கொடைக்கானலுக்கு படையெடுக்கின்றனர். அங்கு வருகிற 19ம் தேதி கோடை விழா தொடங்கப் போகிறது.

மலைகளின் ராணியாக ஊட்டி அறியப்படுகிறது. அதேசமயம் இளவரசி என்று புகழப்படுவது கொடைக்கானல். வருடா வருடம் இங்கு கோடைகாலத்தில் சீசன் களைகட்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் படையெடுத்து வருகிறார்கள். இந்த முறையும் சீசன் கொடைக்கானல் களை கட்டியுள்ளது.

நிற்க இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் கட்டி ஏறுகிறது. அதேசமயம், இட நெருக்கடியும் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆக்கிரமிப்புகளுக்கும் குறைவில்லை. ஆனாலும் ரம்மியமான அந்த சூழலை அனுபவிக்க மக்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதியபடி இருக்கிறது.

மலைகளில் இளமை புதுமை

மலைகளில் இளமை புதுமை

வழக்கம்போல இந்த முறையும் இளமையும், புதுமையும் கலந்த கலவையாக கொடைக்கானல் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.

ரம்மியமான சூழ்நிலை

ரம்மியமான சூழ்நிலை

மலையில் ஏற ஆரம்பிக்கும்போதே அந்த ரம்மியமான சூழ்நிலையும், குளுமையான தட்பவெப்பமும் நம்முடைய மனதை லேசாக்கி விடுகிறது. மலை மீது ஏற ஏற இன்னும் கூலிங் ஜாஸ்தியாகி உற்சாகத்தில் மூழ்கடிக்கிறது.

டிராபிக் ஜாஸ்தி

டிராபிக் ஜாஸ்தி

தற்போது வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் ஏராளமானவர்கள் அதிலிருந்து தப்ப கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கொடைக்கானலி்லும் கூட்டம் கட்டி ஏறிக் கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பும் அதிகம்

ஆக்கிரமிப்பும் அதிகம்

வெள்ளி அருவி, குணா குகை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. காரணம் அங்கு சாலையோரம் ஆக்கிரமித்துப் போடப்பட்டுள்ள சிறு சிறு கடைகளால். சீசனின்போது மட்டுமே வியாபாரம் பார்ப்பவர்கள் இவர்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அசவுகரியங்களைப் பொறுத்துக் கொண்டு கொடைக்கானல் அழகை ரசிக்கிறார்கள்.

மாசுபடுத்தாதீர்கள் மாண்புமிகு மக்களே

மாசுபடுத்தாதீர்கள் மாண்புமிகு மக்களே

கொடைக்கானல் மலையழகை காண குவியும் மக்கள் தவறாமல் சுற்றுச்சூழல் மாசுக்கும் வித்திட்டு விட்டே செல்கிறார்கள். கையோடு கொணடு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்வதால் இயற்கைக்கு பெரும் கேடு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

காட்டுக்குள் தம்மடிக்கும் கூட்டம்

காட்டுக்குள் தம்மடிக்கும் கூட்டம்

வனப்பகுதிக்குள் புகை பிடிக்கக் கூடாது என்று ஆங்காங்கே போர்டு வைத்திருந்தாலும் புகை பிடிப்பவர்களையும் நிறையவே காண முடிகிறது. சிகரெட் விற்பனையும் ஆங்காங்கே அமோகமாக இருக்கிறது.

ஏரிக்கரை பூங்காத்தே

ஏரிக்கரை பூங்காத்தே

ஏரியில் படகு சவாரி விட பெரும் கூட்டம் காணப்படுகிறது. நாமே பெடல் செய்து ஓட்டும் படகுகளும், துடுப்புப் படகுகளும் என களை கட்டிக் காணப்படுகிறது ஏரி.

பிரையன்ட் பூங்காவில் பிரமாதக் கூட்டம்

பிரையன்ட் பூங்காவில் பிரமாதக் கூட்டம்

கொடைக்கானலின் வசீகரங்களில் ஒன்றான பிரையன்ட் பூங்காவிலும் கூட்டம் கேமாவென்று காணப்படுகிறது. ஆனால் இங்கு என்ன பிரச்சினை என்றால், இந்த பூங்காவுக்கு வருபவர்கள் அப்படியே அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு போட்டு விட்டு போவதுதான். பூங்காவே நாறிப் போய் விடுகிறது.

19ம் தேதி கோடை விழா

19ம் தேதி கோடை விழா

குளுகுளு சீசனை முன்னிட்டு கோடைவிழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சி

கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 52வது மலர்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் 19ந் தேதியும், 20-ந் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகள் தீவிரம் இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

காய்கறி தாஜ்மஹால்

காய்கறி தாஜ்மஹால்

இந்த ஆண்டு காய்கறிகளால் ஆன தாஜ்மஹால் அமைக்கப்படுவதுடன், பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அனைவரையும் கவரும் வகையில் சிறப்பு கலை அம்சத்துடன் புதிய கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் தோட்டக் கலைத் துறை மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் ஏராளமான மலர்கள், காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

தொடர்ந்து குவியும் மக்கள்

தொடர்ந்து குவியும் மக்கள்

மலர்க் கண்காட்சி, கோடை விழா தொடக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து கொடைக்கானலில் கூட்டம் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+