காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்க சிறப்பு பயிற்சி
காரைக்கால்: காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமை கலெக்டர் அசோக்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது,
குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில் பல்வேறு தகவல்களையும், நுணுக்கங்களையும் அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய நிலையில் இது போன்ற சிறப்பு பயிற்சி முகாம் மிகவும் அவசியமானது.
குழந்தைகளை ஆண், பெண் என பிரித்துப் பார்க்காமல் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிப்பது அவசியம். குறிப்பாக, இன்றைய காலக் கட்டத்தில் ஆண் குழந்தைகள் தவறான பாதையில் செல்லும் நிலை உள்ளது. அதை நாம் தடுப்பது மிக அவசியம்.
இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ளும் தகவல்களை பிற அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, பொது மக்களும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தகவல்களை அவசியம் தாமே முன் வந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த முகாமில் மாவட்ட எஸ்.பி வெங்கடசாமி, திட்டத்துறை துணை இயக்குனர் சாந்தா வில்லியம்ஸ், குழந்தைகள் நல குழுமத்தின் பொறுப்பளர் மணிவண்ணன், சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல தமிழகத்திலும் அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications