கரூர் அருகே குடிபோதையில் ஏட்டைய்யாவை அடித்து நொறுக்கியவர் கைது
கரூர்: கரூர் அருகே உள்ள குளித்தலையில் போலீஸ் ஏட்டை அடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீரமணிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (23) என்பவர் கோவில் அருகில் குடிபோதையில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீஸ் ஏட்டு சுந்தர்ராஜன் செந்தில்குமாரை அந்த இடத்தை விட்டு போகுமாறு அறிவுறுத்தினார். இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு சுந்தரராஜனை செந்தில் குமார் அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாமல் ஏட்டு சத்தம் போட்டார்.
உடனே அருகில் இருந்த போலீசாரும், பொது மக்களும் ஓடி வந்து செந்தில்குமாரிடம் இருந்து ஏட்டை மீட்டனர்.
இதனையடுத்து சுந்தரராஜன் குளித்தலை காவல் நிலையத்தில் செந்தில்குமார் மீது புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications