கர்ப்பவதி கேட் மிடில்டனைக் கவர்ந்திழுக்கும் இந்திய உணவுகள்
லண்டன்: வாயும் வயிறுமாக இருக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்திய உணவு வகைகள் நிறையவே பிடித்திருக்கிறதாம். அவரது குடும்ப நண்பர்களான இந்தியத் தம்பதியினர் கேட்டுக்குப் பிடித்த உணவு வகைகளை சமைத்து தருகின்றனராம்.
கேட் மிடில்டன் கர்ப்பிணியாக இருக்கிறார். இதையடுத்து அவரைச் சுற்றியே இங்கிலாந்து மீடியாக்கள் தினசரி செய்தி போட்டு வருகின்றன.
கேட் தற்போது என்ன வகையான உணவுகளை சாப்பிடுகிறார் என்று கண்டுபிடித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

நடப்பது 7 மாதம்
தற்போது கேட் மிடில்டன் 7 மாத கர்ப்பிணி ஆவார். இவருக்கு இப்போது வயிற்றுக்கு இதம் தந்து வருவது சான் சிங்காடியா மற்றும் ஹாஷ் தம்பதியினர் சமைத்துத் தரும் உணவுகள்தானாம்.

கேட்டின் சொந்த ஊர்க்காரர்கள்
இந்தியத் தம்பதிகளான இவர்கள் கேட்டின் சொந்த ஊரான பக்கிள்பர்ரியில் வர்த்தக நிறுவனம் வைத்துள்ளனர்.

அப்பா, அம்மாவுக்கு வேண்டப்பட்டவர்கள்
கேட்டின் பெற்றோரான கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டனின் குடும்ப நண்பர்கள் இந்த இந்தியத் தம்பதியினர் ஆவார். தற்போது கேட் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு இந்திய உணவு வகைகளை சமைத்துக் கொடுத்து அனுப்பி வருகிறார்களாம்.

என்ன சாப்பிடுகிறார்?
கேட் என்ன சாப்பாட்டை விரும்பி சாப்பிடுகிறார் என்பதை சொல்ல ஹாஷ் மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மனைவி சான் சமைப்பது கேட்டுக்குப் பிடிக்கும். தனக்குப் பிடித்ததை அவர் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். நாங்கள் வெஜிட்டேரியன். எனவே கேட்டுக்கும் வெஜிட்டேரியன்தான் தருகிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications