பஞ்சகச்சத்துடன்தான் திருப்பதி கோவிலுக்கு விஐபிக்கள் இனி வர வேண்டுமாம்!

Subscribe to Oneindia Tamil

Tirupathi temple
திருப்பதி: திருப்பதி கோவிலுக்கு வரும் விஐபிக்களுக்கு டிரஸ் கோட் அதாவது உடைக்கட்டுப்பாட்டை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த உடையுடன் மட்டுமே இனிமேல் கோவிலுக்கு வர வேண்டுமாம். வேறு உடைகளில் வந்தால் அனுமதி கிடையாதாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் சம்பிரதாய உடை அணிந்து வந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிப்பது என தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. இந்த உடை கட்டுப்பாடு ஜூன் 5-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பெண்களுக்கு புடவை ஜாக்கெட்- சுடிதார்

வி.ஐ.பி. தரிசனத்துக்கு வரும் பெண்கள் புடவை-ஜாக்கெட், பாவாடை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் பஞ்சாபி ஆடைகளே அணிந்து வர வேண்டும்.

ஆண்களுக்கு பஞ்சகச்சம்

ஆண்கள் வெள்ளை பஞ்சகட்சம், மேல் துண்டு, வெள்ளை வேட்டி-சட்டை, வெள்ளை குர்தா, பைஜாமா ஆகியவையே அணிந்து வர வேண்டும். மேற்கண்ட சம்பிரதாய ஆடைகளை அணிந்து வருபவர்களே ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பான புகைப்படத்துடன் கூடிய விளம்பர சுவரொட்டி கோவில் முழுக்க ஒட்டப்பட்டு உள்ளது. இதே உடை கட்டுப்பாட்டை சாதாரண பக்தர்களுக்கு அமுல்படுத்தவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+