பீகாரில் 4மாத கர்ப்பிணியை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது
பூர்ணியா: பீகார் மாநிலத்தில் 4 மாத கர்ப்பிணியை 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பூர்ணியா மாவட்டத்தில் பேலி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்ரதா. இவரது கணவர் லாரி கிளீனராக உள்ளார். தற்போது சுஷ்ரதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சுஸ்ரதா தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கஷ்டமான சூழ்நிலையில் கர்ப்பமாக உள்ள சுஷ்ரதாவிற்கு பண உதவி செய்வதாக வந்தார் அவருக்குத் தெரிந்த பெண் ஒருவர்.
நேற்று முன்தினம் சுஸ்ரதாவின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். அப்போது உனக்கு பண உதவி வாங்கி தருகிறேன் என்று கூறி அவர் சுஸ்ரதாவை அழைத்து சென்றார்.
சந்த்பூர் என்ற கிராமத்துக்கு சென்றதும் அந்த பெண் சுஸ்ரதாவை ரூ.11 ஆயிரத்துக்கு அசோக்சிங் என்பவருக்கு விற்றார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அசோக்சிங், ரூ. 11 ஆயிரம் கொடுத்துவிட்டு, உடனே அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து சுஷ்ரதாவை மிரட்டி தாலி கட்டினார். பிறகு அவர் சுஸ்ரதாவை உத்திர பிரசேத்தில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
இதுபற்றி பேலி கிராமத்தை சேர்ந்த சமூக நல அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சில்பிசிங் என்பவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி சுஸ்ரதாவை மீட்டனர்.
கர்ப்பிணிப் பெண்ணை ஏமாற்றி விற்பனை செய்த பெண்ணையும், விலைக்கு வாங்கிய அசோக்சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications