அப்படியானால் தர்மபுரி பஸ் எரிப்புக்கான இழப்பீட்டை அதிமுகவிடமிருந்து அரசு வசூலிக்குமா?... பாமக கேள்வி

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 1992ல் பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அந்த அரசியல் கட்சிகள் அதற்கான இழப்பீடை தரவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு, 94ல் திருத்தம் செய்யப்பட்டு நிலையில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரையில் எத்தனை அரசியல் கட்சிகளிடம் இவர்கள் அதற்கான இழப்பீட்டை பெற்றிருக்கிறார்கள்.
தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்டதே, அதற்கு அதிமுகவிடம் இந்த அரசு உடனடியாக இழப்பீட்டை பெற வேண்டும். அதிமுகவினர் பல வன்முறைகளை நிகழ்த்திருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த டி.என்.சேஷன், அசோகா ஓட்டலில் இருந்து வெளியே வரமுடியாமல் அவர்கள் மீது தாக்குதல், விஜயன் வழக்கறிஞர் மீது தாக்குதல், வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீது தாக்குதல், மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தாக்குதல் நடத்தினார். அதற்குப் பிறகு இளவரசனுக்கு பால்வளத்துறையின் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்று பதவி கொடுத்து அழகு பார்த்த இயக்கம்தான் அதிமுக.
ஒரு வன்முறையை யார் செய்கிறார்களோ அவர்களை ஆதரிப்பதும், அவர்களை போற்றுவதும் அதிமுகவினரின் கடந்த கால வரலாறு. தராசு அலுவலகம் தாக்கப்பட்டு இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டு கணேசன் என்கிற ஊழியர் கொல்லப்பட்டார்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு ஊர்வலம் வந்தபோது, பத்திரிகையாளர்கள் டிஜிபி அலுவலத்திற்குள்ளேயே அடித்து விரட்டப்பட்டார்கள். இத்தனையும் செய்தது அதிமுக. இதுபோன்ற தொடர் வன்முறைகளை செய்யக்கூடியதுதான் அதிமுக. ஆனால் அந்தக் கட்சியினர் இன்றைக்கு சொல்லுகிறார்கள் நாங்கள் வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்றார் பாலு.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications