இன்று முதல் சேவையில் ட்ரீம்லைனர் விமானங்கள்...
Subscribe to Oneindia Tamil

போயிங் நிறுவனத்தின் புதிய ரக விமானமான ட்ரீம்லைனர் விமானத்தின் பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக உலகம் முழுவதும் இந்த ரக விமானங்கள் அனைத்தும் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பேட்டரியின் பழுது சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் இன்று முதல் ட்ரீம்லைனர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ஏர் இந்தியா நிறுவனமானது போயிங் நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் 6 விமானங்கள் இப்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமாக டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ட்ரீம்லைனர் விமானம் இயக்கப்பட இருக்கிறது. பின்னர் 22-ந் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தில் ட்ரீம்லைனர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications