Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி இந்த சிலைகள் வரிசையில் நம்ம தமிழ்த் தாயும்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகப் புகழ் பெற்ற சிலைகளின் வரிசையில் விரைவில் தமிழ்த் தாயும் சேரவுள்ளார் - முதல்வர் ஜெயலலிதாவின் புண்ணியத்தால்.

தமிழகத்தின் இரண்டாவது மாபெரும் சிலையாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ள தமிழ்த் தாய் சிலை உருவெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவிலும், இந்திய அளவிலும் ஏராளமான சிலைகள் ஏற்கனவே உலகப் புகழுடன் திகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் தமிழ்த் தாயின் சிலையும் சேரவுள்ளதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

சரி உலகஅளவில் தற்போது பிரமாண்டமாக காட்சி தரும் சிலைகள் குறித்து ஒரு ரவுண்டு பார்ப்போமா....

நம்பர் ஒன் உயரமான சிலை இதுதான்

நம்பர் ஒன் உயரமான சிலை இதுதான்

உலகின் மிக உயரமான சிலை என்ற பெயரை சீனாவைச் சேர்ந்த ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை பெற்றுள்ளது. இது லூசான் என்ற இடத்தில் உள்ளது. இதன் உயரம் 420 அடியாகும். தாமரை போன்ற பீடத்தின் மேல் இந்த சிலை கம்பீரமாக நிற்கிறது.

2வது இடமும் புத்தருக்கே

2வது இடமும் புத்தருக்கே

2வது உயரமான சிலை என்ற பெயர் மியான்மரைச் சேர்ந்த லக்யூன் சேத்கியார் என்ற புத்தர் சிலைக்குக் கிடைத்துள்ளது. இது 381 அடி உயரமாகும்.

ஜப்பான் புத்தருக்கு 3வது இடம்

ஜப்பான் புத்தருக்கு 3வது இடம்

ஜப்பானின் உஷிகு என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள 360 அடி உயர உஷிகு தைபுட்சு என்ற புத்தர் சிலைதான் உலகின் 3வது உயரமான சிலையாகும்.

ரஷ்யாவின் பீட்டர் சிலை

ரஷ்யாவின் பீட்டர் சிலை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முதலாவது பீட்டரின் கம்பீரமான சிலை கிட்டத்தட்ட 315 அடி உயரத்தில் எழுந்து நிற்கிறது. இதுவும் உலகின் உயரமான சிலைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள ஒன்றாகும்.

279 அடி உயரத்தில் ரஷ்யத் தாய்

279 அடி உயரத்தில் ரஷ்யத் தாய்

முன்னாள் சோவியத் யூனியனின் வோல்காகிராட் என்ற இடத்தில் அமைந்துள்ள தி மதர்லான்ட் கால்ஸ் என்ற பெயரிலான பிரமாண்ட சிலையும் உலகப் புகழ் பெற்றதாகும். இது ரஷ்யத் தாய் சிலையாகும். இதன் உயரம் 279 அடியாகும்.

தைவான் புத்தர்

தைவான் புத்தர்

189 அடி உயரத்தில் தைவானின் ஷின்சு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்ரேயா புத்தர் சிலைதான் அந்த நாட்டின் உயரமான சிலையாகும்.

சுதந்திர தேவி சிலை

சுதந்திர தேவி சிலை

நியூயார்க் அருகே லிபர்ட்டி தீவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிலைதான் சுதந்திர தேவி சிலை. இதை அடிப்படையாக வைத்துத்தான் நமது தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படவுள்ளது. சுதந்திர தேவி சிலையின் உயரம் 151 அடியாகும்.

காத்மாண்டு சிவா...

காத்மாண்டு சிவா...

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கைலாசமத் மகாதேவ் என்ற பெயரில் பிரமாண்ட சிவன் சிலை உள்ளது. இதன் உயரம் 143 அடியாகும்.

பத்து குகை முருகன்

பத்து குகை முருகன்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகே கோம்பாக் என்ற இடத்தில் 140 அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமான முருகன் சிலை உள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை இதுதான்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

குமரிக் கடலில் பிரமாண்டமாக எழுந்து நிற்கும் திருவள்ளுவர் சிலைதான் தமிழகத்திலேயே மிகவும் உயரமான சிலையாகும். திமுக ஆட்சிக்காலத்தில் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. இதன் மொத்த உயரம் 133 அடியாகும்.

மதுரை தமிழ்த் தாய் சிலை

மதுரை தமிழ்த் தாய் சிலை

இந்த வரிசையில் விரைவில் மதுரை தமிழ்த் தாய் சிலை இடம் பெறவுள்ளது. இதன் உயரம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் ரூ.100 கோடி பட்ஜெட் என்பதால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இனி மதுரை என்றதும் மீனாட்சி அம்மன் மட்டுமல்ல தமிழ்த் தாயும் நம் நினைவுக்கு வருவார்.. கூடவே ஜெயலலிதா பெயரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+