சடார்னு சரிந்த தங்கத்தின் விலை: 10 கிராமுக்கு ரூ.500 குறைவு
Subscribe to Oneindia Tamil

தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 15ம் தேதி அதிகப்படியாக 10 கிராமுக்கு ரூ.1,160 குறைந்து ரூ. 26,640க்கு விற்பனையானது. இதையடுத்து தங்கத்தின் விலை நேற்று தான் வெகுவாகக் குறைந்தது. அதாவது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து ரூ.27,300க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை ரூ.600 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.500 குறைந்து ரூ. 26,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைவதும், கூடுவதுமாக இருந்தாலும் நேற்றும், இன்றும் தான் வெகுவாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.43,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications
