அதெப்படி சிங்கள மன்னன் மகாசேனவின் பெயரை புயலுக்கு வைக்கலாம்? இலங்கையில் களேபரம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வங்கக் கடலில் உருவெடுத்த இலங்கையைக் கடந்து வங்கதேசம் நோக்கி பேரழிவை சுமந்து செல்லும் 'மகாசேன்' புயல் இலங்கை அரசியலில் பெரும் பிரளத்தையே உருவாக்கி இருக்கிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல்தான் இந்த மகாசேன். ஒடிஷாவையும், வங்கதேசத்தையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்தப் புயலுக்கு தற்போது வைக்கப்பட்டுள்ள பெயர் இலங்கை வைத்த பெயராகும். இதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

சிங்கள மன்னன் பெயராம்

சிங்கள மன்னன் பெயராம்

தற்போது உச்சரிக்கப்படும் மகாசேன் என்பது இலங்கை அனுராதபுரத்தை ஆண்ட சிங்கள மன்னன் மகாசேன என்பவரது பெயராகும். சிங்கள மன்னனின் பெயரை எப்படி ஒரு பேரழிவுப் புயலுக்கு சூட்டலாம் என்பது பவுத்த அமைப்புகளின் கேள்வி.

கலாச்சாரத்துறைக்கு கேள்வி

கலாச்சாரத்துறைக்கு கேள்வி

இது தொடர்பாக இலங்கையின் வானிலை மையத்தை இலங்கை வரலாற்று நீரியல் கலாசாரத்துக்காக தேசிய அமைப்பு கேள்வி கேட்டிருக்கிறது. இதுபற்றி காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஓ.கே. பெயர் வேண்டாம்

ஓ.கே. பெயர் வேண்டாம்

இந்த சர்ச்சையால் 'மகாசேன' என்ற பெயரை புயலுக்காக பயன்படுத்தப் போவது இல்லை என்று இலங்கை வானிலை ஆய்வு அமையம் முடிவு செய்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளது.

சிங்கள அமைப்பு போர்க்கொடி

சிங்கள அமைப்பு போர்க்கொடி

இதனிடையே புயலுக்கு மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட்டதற்கு ராவய பலய என்ற சிங்கள அமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முட்டாப்பய முடிவு

முட்டாப்பய முடிவு

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ராவண பலய அமைப்பின் செயலர் வண. இத்தேகண்டே சத்ததிஸ்ஸ தேரர், மகாசேன மன்னனின் பெயரை புயலுக்குச் சூட்டியது முட்டாள்தனமான முடிவு. அதுக்கு பேசாமல் பிரபாகரனின் பெயரை சூட்டலாமே... என்று கொந்தளித்திருக்கிறார்.

இலங்கையை புயல் கடந்தாலும் இந்த பெயர் சர்ச்சை புயல் பிரளயம்தான் போல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+