கருணாநிதி ஒரு எலி.. அவரது எம்.எல்.ஏ.க்கள் தறுதலைகள்” ... சொல்கிறார் ஓபிஎஸ்

சட்டசபை, பொதுத்துறை ஆகிய மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியபோது கூறியதாவது:
"கச்சதீவை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத்தீவை, தாரை வார்த்துவிட்டு, அதை மறைக்க இப்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என சட்டசபையில் கடந்த 3-ம் தேதி, அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உசுப்பி விட்டுள்ளது என, கருணாநிதி கூறியுள்ளார்.
மதம் கொண்ட யானை ஒன்று, வேண்டும் என்றே சிங்கத்திடம் சென்று வம்பு இழுத்ததாம். உடனே சிங்கம், யானையை ஓங்கி அறைந்ததாம். இதைக் கண்ட எலி, "நான் ஏற்கனவே யானையை ஒரு அறை அறைந்தேன்; அதை பார்த்துவிட்டுத் தான் சிங்கம், இப்போது அறைந்துள்ளது" என கூறியதாம். அதைப் போல் எலி நிலையில்தான், கருணாநிதி இருக்கிறார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருவதில்லை. முதல்வரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் வருவதில்லை. ஊர் சுற்றும் இந்த தறுதலைகள், ‘சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் ஊர் ஊராக கூட்டம் போட்டு வருகின்றனர். உண்மையில், தி.மு.க.வினரால் சட்டசபை படும்பாடு என்ற தலைப்பில் தான் கூட்டம் நடத்த வேண்டும். ஏனெனில், சபை மரபுகள் எதையும் அவர்கள் மதிப்பது இல்லை" என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications