குப்பையில் ’கோக்க-கோலா’: ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு விற்கப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்
நியூயார்க்: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு இண்டர் நெட்டில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சுவை மாறாமல் 1943-ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.
தற்போது, அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து கிளிஃப் கூறியுள்ளதாவது :-

மரப்பெட்டியில் இரகசியம்...
சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை நானும் என் மனைவி அர்லேனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது.

கோக்க-கோலா தயாரிக்கும் முறை...
பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கோக்க-கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

வார்த்தை தவறிவிட்டார்கள்...
இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என கோக்க-கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்புகொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால், சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை.

1.5 கோடி டாலருக்கு ஏலம்...
எனவே, அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம் (ஆன் லைன்) மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 50 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்னர் அறிவித்தேன். இப்போது 1.5 கோடி டாலர்களாக உயர்த்தி விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications