தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக கடும் எதிர்ப்பு!
டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் "பெரும்பான்மை" அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே ஆணையத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி மாத்தூர் ஜனவரி மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, சபாநாயகர் மீரா குமார், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீதிபதி ஜோசப்பை நியமிக்க சுஷ்மா ஸ்வராஜூம், அருண் ஜேட்லியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவின் அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications