உ.பி.யில் 2 தாஜ்மகால்: ஒன்று ஷாஜகான் கட்டியது, மற்றொன்று ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் கட்டியது
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் புலாந்ஷாஹரைச் சேர்ந்தவர் பைசுல் ஹஸன் காதிரி(77). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். அவரின் மனைவி தஜமுல்லி பேகம் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து காதிரி தனது மனைவியின் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலைப் போன்றே ஒரு கட்டிடத்தை கட்டினார்.
புலாந்த்ஷாஹர் மாவட்டத்தில் 5,000 சதுர அடியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குட்டி தாஜ்மகாலில் தஜமுல்லி பேகத்தின் நினைவிடம் உள்ளது. தாஜ்மகாலைப் போன்று பெரிதாக இல்லாவிட்டாலும் காதிரி கட்டியுள்ள குட்டி தாஜ்மகால் அழகாக உள்ளது.
இது குறித்து காதிரி கூறுகையில்,
ஷாஜகானின் தாஜ்மகாலைப் பார்த்தபோது அவர் காதலுக்காக இப்படி ஒன்றை கட்டி சாதாரண மனிதர்களை அவமதித்துவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் எனது மனைவியின் மறைவிற்குப் பிறகு தான் தாஜ்மகால் பணம் சம்பந்தப்பட்டது அல்ல காதலின் ஆழம் சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொண்டேன். எங்களுக்கு குழந்தை இல்லாததால் இருந்த பணத்தை வைத்து எங்களுக்கு சொந்தமான இடத்தில் குட்டி தாஜ்மகால் கட்டினேன். என் வீட்டில் இருந்து பார்த்தால் நான் கட்டிய தாஜ்மகால் தெரியும் என்றார்.
ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள இந்த குட்டி தாஜ்மகால்.

காதிரியின் தாஜ்மகால்
இது தான் காதிரி தனது மனைவிக்காக கட்டிய தாஜ்மகால்.

ஷாஜகானின் தாஜ்மகால்
மன்னர் ஷாஜகானால் கட்டுப்பட்டு காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகால்.

துபாயிலும் தாஜ்மகால்
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா உள்ள துபாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தாஜ்மகால் போன்றே ஒரு ஹோட்டல் கட்டப்படவிருக்கிறது. இந்த ஹோட்டல் 300 அறைகள் கொண்டதாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications