விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி கொலை... பதற்றம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருப்பவர் முனுசாமி. இவர் கடந்த தி.மு.க. ஆட்சியில் சங்கராபுரம் பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
முனுசாமி நேற்று இரவு சங்கராபுரம் கடை வீதியில் தனியாக நின்று கொண்டிருந்தபோது, டாடா சுமோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சாராமரியாக வெட்டியது. பல முறை வெட்டிய கும்பல் உடனே அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியது.
ரத்தவெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முனிசாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமயில் சேர்த்தனர். முனுசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முனுசாமிக்கும் கடும் போட்டி இருந்துள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கொலை சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications