ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியை கற்பழித்துக் கொன்றவருக்கு 45 ஆண்டு சிறை: கோர்ட் அதிரடி

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள க்ராய்டனின் எட்வின் தெருவில் உள்ள வீட்டில் தங்கி படித்து வந்தவர் இந்தியரான தோஷா தாக்கர்(24). அவர் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் ஆஸ்திரேலியரான டேனியல் ஸ்டானி-ரெஜினால்ட்(21). அவர் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி தோஷா தாக்கரை அவர் வசிப்பிடத்திற்கே சென்று கற்பழித்தார். பின்னர் கேபிள் வயரை வைத்து தாக்கரின் கழுத்தை நெறித்துக் கொன்று அவரது உடலை சூட்கேஸில் வைத்து பாராமடா நதி அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டார்.
மெடோபேங்க் பார்க் அருகே உள்ள கால்வாயில் ஒரு சூட்கேஸ் மிதப்பதை அங்கு இருந்த பணியாட்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அதை எடுத்து திறந்து பார்த்தபோது உள்ளே தாக்கரின் உடல் இருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் டேனியலை கைது செய்தனர்.
டேனியல் இந்த கொடூரத்தை செய்தபோது அவருக்கு வெறும் 19 வயது தான். அவர் இந்த பாதகச் செயலை திட்டமிட்டு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி டெரக் பிரைஸ் டேனியலுக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும் அவர் 30 ஆண்டுகள் தண்டனைக்கு பிறகே பரோலில் வெளியே வர முடியும். அதாவது 2041ல் தான் டேனியல் பரோலில் வர முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications