விரைவில், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம்: ப. சிதம்பரம்
லண்டன்: மத்திய அரசு சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் என்று அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் கபில் சிபல், வி. நாராயண சாமி மற்று சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்ததாவது, ‘சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள எனது தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு, விரைந்து பரிசீலித்து சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும். ஆனாலும், சிபிஐக்கு கண்காணிப்பு அமைப்பு ஒன்று வேண்டும். அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் கீழ் செயல்படும். அதாவது, சிபிஐயின் விசாரணையில் எந்த ஒரு அமைப்பும் தலையிட முடியாத வகையில் தன்னாட்சி அதிகாரம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது' என கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications