கர்நாடகா: நடிகர் அம்பரீஷ், 10 புதுமுகங்கள் உட்பட 28 அமைச்சர்கள் பதவியேற்பு!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக சித்தராமையா கடந்த 13-ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் காங்கிரஸ் மேலிடத்துடன் புதிய அமைச்சர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு பெங்களூர் திரும்பினார். இதனைத் தொடர்ந்து இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
கர்நாடக மாநிலத்தின் கேபினட் அமைச்சர்களாக தேஷ்பாண்டே, குவாமர் உல் இஸ்லாம், பிரகாஷ் ஹக்கேரி , ராமலிங்க ரெட்டி, டி.பி. ஜெயச்சந்திரா, ஹெச்.கே. பாட்டீல், ஷாமனூர் சிவசங்கரப்பா, சீனிவாச பிரசாத், மகாதேவப்பா, ஜார்ஜ், மகாதேவ பிரசாத், நடிகர் அம்பரீஷ், வினய்குமார் சொராகே, பாபுராவ், யு.டி. காதர், சதீஷ் ஜர்கிஹோலி, எம்.பி. பாட்டீல், ஆஞ்சநேயா, சிவராஜ் தங்கடகி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டார்.
இணை அமைச்சர்களாக அபய்சந்திர ஜெயின், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா, ஷரனா பிரகாஷ் பாடீல், சந்தோஷ் லட், கிம்மனே ரத்னாகர், நடிகை உமாஸ்ரீ மற்றும் பரமேஸ்வர் நாயக் ஆகியோரும் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் பரத்வாஜ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றவர்களில் பெரும்பாலானோர் ஆளுநர் பரத்வாஜ், முதல்வர் சித்தராமையா ஆகியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
அமைச்சர்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர். ஒரே ஒரு பெண் அமைச்சராக உமாஸ்ரீ பதவியேற்றார். இவர்களுக்கான இலாகாக்கள் விரைவில் ஒதுக்கப்படும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. அவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன. இருப்பினும் அவரை அடுத்த சுற்றில் அமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications