கனடா வான்பறப்பை முற்றுகையிடும் பறக்கும் தட்டுகள் எண்ணிக்கை 100% அதிகரிப்பு!
டொரன்டோ: வேற்றுக்கிரக வாசிகள் வரப்போறாங்க.. இருக்காங்க..படையெடுப்பாங்க.. என்றெல்லாம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அவ்வப்போது கதைகள் ரெக்கை கட்டி பறக்கும்.. ஆனால் இந்தக் கதைகள் நிஜமோ என நம்பும்படியாக கனடாவின் வான்பரப்பு பறபறத்துக் கிடக்கிறது.
கனடா நாட்டின் "Ufology Research" என்ற அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த 2011மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கனடா வான் பரப்பில் 5 நாட்களுக்கு ஒருமுறை இத்தகைய வினோத வான்தட்டுகள் பறப்பது சர்வசாதரணமாகிவிட்டதாம்...
இப்படி வரும் பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கின்றதாம்! சரி ஒரு புள்ளிவிவரத்தைப் பார்க்கலாம்..

2008-ம் ஆண்டு
கடந்த சில ஆண்டுகளில் முதல் முறையாக 2008ம் ஆண்டுதான் 1004 முறை இப்படி பறக்கும் தட்டுகள் வானில் தெரிந்தனவாம்...

2011ஆம் ஆண்டு
2008ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட சற்றே குறைவாகத்தான் 2011-ல் பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை தென்பட்டன.. அதாவது 986 முறை இப்படி பறக்கும் தட்டுகள் விசிட் அடித்துவிட்டுப் போயிருக்கின்றன

1981 முறை
ஆனால் கடந்த 2012ஆம் ஆண்டு 1981 முறை கனடா வான்பரப்பை தட்டிவிட்டுப் போயிருக்கின்றனவாம் பறக்கும் தட்டுகள்... இவை எங்கிருந்து வருகின்றன? இவற்றில் என்ன இருக்கின்றன? என்பதுபற்றிய தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது..
நடப்பு ஆண்டிலும் பறக்கும் தட்டுகள் வானில் பறப்பது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.. எப்படியும் மாட்டும்ல.. என்ன இருக்கும் தெரியும்ல..
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications