சாப்பிட வருபவர்களைக் கண்காணிக்கப் போகும் 'அம்மாவின் 3வது கண்'!
சென்னை: சென்னை மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ள மாநகராட்சியின் அம்மா உணவகங்களுக்கு கூட்டம் கட்டி ஏறிக் காதை அத்துக் கொண்டிருப்பதால் அசம்பாவிதங்களோ, வேறு குற்றச் செயல்களோ நடந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு தற்போது ரகசியக் காமராக்களை வைத்துக் கண்காணிக்கப் போகின்றனர். மேலும் வாட்ச்மேன்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளும் அம்மா உணவகங்கள் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டு செம ஹிட்டாகியுள்ளன.
ஆரம்பத்தில் இங்கு ஒரு இட்லி ரூ. 1க்கும், சாம்பார் சாதம் ரூ. 5க்கும், தயிர் சாதம் ரூ. 3க்கும் விற்பனை செய்யப்பட்டன.

மக்கள் மத்தியில் செம கிராக்கி
இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக ஏழைத் தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூட்டம் அலை மோதுகிறது.

குண்டா குண்டாவாக குவிக்கப்படும் இட்லிகள்
இட்லிக்குத்தான் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெருமளவிலான இட்லிகளை அவித்துக் குவிக்கிறார்கள்.

கூடுதலாக பொங்கல், லெமன் ரைஸ், கறிவேப்பிலை சாதம், சப்பாத்தி
தற்போது இந்த உணவகம் கூடுதலாக சப்பாத்தி, பொங்கல், லெமன் ரைஸ் ஆகியவற்றையும் தர ஆரம்பித்துள்ளது.

காலையில் பொங்கல் - மதியம் லெமன் ரைஸ்
காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியம் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதமும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதே போல, மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்படும்.

அடேங்கப்பா... 1 கோடி இட்லிகள் விற்பனை
இதுவரை அம்மா உணவகங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 75 லட்சம் இட்லிகளும், 35 லட்சம் சாம்பார் சாதங்களும், 22 லட்சம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளனவாம்.

கண்காணிப்புக் கேமராக்கள்... வாட்ச்மேன்கள்...
அடுத்து, 200 அம்மா உணவகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. அதேபோல வாட்ச்மேன்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
கண்டிப்பாக தேவைதான்... பொறாமைக்காரர்கள் ஏதாவது சில்மிஷம் செய்ய வாய்ப்புள்ளதே...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications