கெளரவத்திற்காக... காதல் மணம் புரிந்த தங்கை, மாமனாரை கொடூரமாகக் கொன்ற அண்ணன்!
நாகர்கோவில்: வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்தவரை மணம் புரிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த தங்கையை மிகக் கொடூரமாகக் கொன்று விட்டார் அவரின் உடன் பிறந்த அண்ணன்.தங்கையின் கணவர், மாமனார் ஆகியோரையும் வெறித்தனமாக வெட்டியதில் மாமனார் உயிரிழந்தார். கணவரின் உயிர் ஊசலாடி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியுள்ளது இந்த இரட்டைக் கொலை. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 55 வயதான ஜெயராம். இவருடைய மகன் 21 வயதான சிவா. பட்டம் படித்துள்ளார். ஒரு முறை இவர் மொபைல் போனில் நண்பருக்குப் போட்டபோது அது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த செளமியா என்ற பெணணுக்குப் போய் விட்டது.அது பின்னர் நட்பாக மாறி, காதலாக மலர்ந்தது.
பின்னர் தொடர்ந்து இருவரும் போனில் பேசி காதல் வளர்த்தனர். 2 ஆண்டுகளாக இது நீடித்தது. இருவரது காதலும் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. செளமியாவின் குடும்பத்தார் உடனடியாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
இதனால் செளமியா வீட்டைவிட்டுவெளியேறி நாகர்கோவில் வந்தார். அங்கு சிவாவைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். இதையடுத்து சிவாவும், செளமியாவும் கிருஷ்ணன் கோவில் சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வடசேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பின்னர் செளமியாவின் குடும்பத்தாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். செளமியாவை தங்களுடன் வந்து விடுமாறு அவரது அண்ணன் காலில் விழுந்து கேட்டார். ஆனால் செளமியா மறுத்து விட்டார். சிவாவுடன்தான் வாழ்வேன் என்று கூறி விட்டார்.
செளமியாவும், சிவாவும் மேஜர் என்பதால் இருவரையும் போலீஸார் அனுப்பி வைத்து விட்டனர். இதையடுத்து இருவரும் சந்தோஷமாக குடித்தனத்தைத் தொடங்கினர். சிவா, செளமியாவுடன், சிவாவின் தந்தை ஜெயராமும் தங்கியிருந்தார். ஜெயராமின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று செளமியாவின் இன்னொரு அண்ணன் சபரி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் காரில் செளமியா வீட்டுக்கு வந்தனர். அண்ணனக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார் செளமியா. பின்னர் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு கறி எடுத்து சமைத்து ஆசை ஆசையாக சாப்பாடு பரிமாறினார் செளமியா.
சாப்பிட்டு முடிந்ததும் காரில் ஏறி சபரியும், நண்பர்களும் வெளியே போனார்கள். பின்னர் மாலையில் திரும்பி வந்தனர். வந்தவர்கள் சிறிது நேரத்தில் செளமியாவையும், கணவர் சிவாவையும், மாமனார் ஜெயராமையும் சரமாரியாக கத்தியால் கழுத்தை அறுத்தும், வயிற்றைக் கிழித்தும் கொடூமாரக தாக்கத் தொடங்கினர்.
3 பேரும் இதில் சிக்கி படுகாயமடைந்தனர். சிவா ரத்தம் கொட்டக் கொட்ட வெளியே ஓடி வந்து விழுந்தார். அதேபோல ஜெயராமும் குடல் வெளியே வந்த நிலையில் ஓடி வந்து விழுந்தார். இதைப் பார்த்து அந்தப்பகுதியே பரபரப்பானது. சபரி உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறிப் பறந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, செளமியா ரத்த வெள்ளத்தில் கொடூரமாக இறந்து கிடந்தார். ஜெயராம், சிவாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயராம் உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலையில் சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசையாக சாப்பாடு போட்டு உபசரித்த தங்கையை காதலித்து கல்யாணம் செய்தாள் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாக தீர்த்துக் கட்டிய அண்ணன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications