ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு?

பல ஆண்டுகளாக ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா குடுபத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
இதனால் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவும், அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, அண்மைக் காலமாக சோனியாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அதனால், முன்பு போல டெல்லியில் இருந்து ரேபரேலிக்கு அவரால் செல்வதற்கு இயலவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரேபரேலியில் கட்சி வளர்ச்சி, தொகுதிப் பணி ஆகியவற்றை சோனியாவின் மகள் பிரியங்கா வதேரா கவனித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்காவை ரேபரேலியில் நிறுத்துவதற்கு காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக என்.டி.திவாரி பிரசாரம் செய்தார். இது காங்கிரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
இதை உணர்ந்த சோனியா சமீபத்தில் என்.டி.திவாரியை அழைத்து பேசினார். அவரிடம் பிரியங்காவுக்கு ஆதரவு கொடுக்க சோனியா கேட்டுக் கொண்டார். இதனால் பிரியங்காவை ஆதரித்து பிரசாரம் செய்ய திவாரி சம்மதித்து இருப்பதாக தெரிகிறது.
தற்போது பிரியங்காவிற்கு உதவியாக பிகார் மாநில காங்கிரஸில் தீவிரமாகப் பணியாற்றிவரும் பிரீதி கரேயிடம் ரேபரேலி தொகுதிப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், பிரியங்காவை ரேபரேலி தொகுதியில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளே என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications