தமிழகத்திற்கு கொடுக்க காவிரியில் நீரே இல்லை என்பதா? கர்நாடக காங். தலைவருக்கு திருமா கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப் போவதாக கர்நாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"கடந்த பாஜக அரசு காவிரிப் பிரச்சனையில் கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் திறந்து விடுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது தவறு. அது காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காரணமாகி விட்டது'' என குற்றம்சாட்டியிருக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தமிழ் நாட்டுக்குக் கொடுப்பதற்குக் காவிரியில் தண்ணீர் இல்லை' எனவும் தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் தமிழகத்துக்கு உரிய நீரைத் தரமாட்டோம் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே கர்நாடக காங்கிரஸ் தலைவர் இப்படிப் பேசியுள்ளார்.
மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுக்கும். கடந்த கால நடைமுறைகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட காவிரி மேலாண்மை வாரியத்தையோ, காவிரி கண்காணிப்புக் குழுவையோ இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை.
தேர்தல் லாபத்துக்காக மத்திய காங்கிரஸ் அரசு இப்படித் தமிழக மக்களின் உரிமையைப் பலிகொடுப்பது சரி தானா? என்பதைத் தமிழ் நாட்டிலிருக்கும் காங்கிரஸ்காரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவின் பேச்சை அவர்கள் கண்டிப்பதோடு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும் படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளித்துத் தமிழகத்துக்கு உரிமையான தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது பாராட்டத்தக்கது தான் என்றாலும் காவிரியில் தண்ணீர் வருவதற்கு அதுமட்டுமே போதுமானதல்ல.
உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டும் இதைத் தீர்த்துவிட முடியாது என்பதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு தமிழக மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications