டாக்டருடன் கள்ளத் தொடர்பு: மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி
சென்னை: பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்ததால், தன் மனைவியை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ளது பூலாம்பாடி கிராமம். அங்கு கூலி வேலை செய்து வரும் சின்னசாமியின் மனைவி ஜெயலட்சுமி (34).
ஜெயலட்சுமிக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருமாறியது. இதுபற்றி தெரிய வந்ததும், சின்னச்சாமி அவர் மனைவியை கண்டித்துள்ளார். எச்சரித்த பின்னும் டாக்டருடனான கள்ளத் தொடர்பை ஜெயலட்சுமி கைவிடவில்லையாம்.
இந்நிலையில் ஜெயலட்சுமி கருவுற்றார். குழந்தை பிறந்ததும், பிரச்சினை வேறு விதத்தில் உருவாகியுள்ளது. அதாவது, இந்த குழந்தை கள்ளத்தொடர்பால் பிறந்தது என்று நினைத்த சின்னச்சாமி,அதனைக் கூறியே மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். மறுத்த ஜெயலட்சுமியை ஆத்திரத்தில் சின்னச்சாமி தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மனைவி இறந்ததை உறுதியானவுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் சின்னச்சாமி.
ஆனால், அதற்குள் தகவல் அறிந்து அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சின்னசாமியை கைது செய்த போலீசார் பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications