நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலி
நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் மருத்துவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தைச் சேர்ந்த மருத்துவர் நகுலவேந்தனின் மனைவி ராஜசுபா(36). பல் மருத்துவர். அவர்கள் சுத்தமல்லி விலக்கில் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தனர். அவர்களின் மகன்கள் யுகாபரமமுத்து (6), கனியர் (4). ராஜசுபா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நகுலவேந்தன் சுபாவை அவரது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றார்.
பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுபா சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அவரது உடல் நிலை தேறியதால் மீண்டும் நெல்லைக்கு வந்தார். நெல்லைக்கு வந்த பிறகு சுபா சோர்வாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் திடீர் என்று மரணம் அடைந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது என்றும், இதையடுத்து அவரது ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் குறைந்ததால் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications