மதுரையில் அனுமதி பெறாத அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு சீல்: கலெக்டர் நடவடிக்கை
மதுரை: மதுரையில் உள்ளூர் திட்டக் குழும அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் திட்டக்குழுவிற்கு ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார். ஆட்சியரின் நடவடிக்கையின் பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
காதர் முத்து என்பவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள சம்பக்குளத்தில் தரைத் தளத்துடன் கூடிய மூன்று அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டியுள்ளார். இந்தக் கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெறவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து உள்ளூர் திட்டக் குழு அதிகாரிகள் விளக்கம் கேட்ட போது, முந்தைய மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி வழங்கிய வரைபட அனுமதியைக் காதர் காண்பித்தார். இது முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதி என்பதால் , இந்த அனுமதி செல்லாது என்று கூறி இன்று அந்த கட்டடத்துக்கு சீல் வைத்தனர்.
மேலும், எல்ஐசி பகுதியில் உள்ள YWCAவுக்கு சொந்தமான தரைத்தளத்துடன் கூடிய ஐந்து அடுக்கு வணிக வளாகம், மொத்த 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்துக்கும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறி உள்ளூர் திட்டக் குழு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் அனுமதி இன்றி அடுக்குமாடி கட்டடம் கட்டியர்வர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் பட்சத்தில் மேலும் பல கட்டடங்களுக்கும் அடுத்தடுத்து சீல் வைக்கப்படும்.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications