தொடர் பவர் கட் தான் ஜெயலலிதாவின் 2 ஆண்டு சாதனை: மு.க.ஸ்டாலின் கிண்டல்

விழுப்புரம் அருகே சாலையாம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்-ரஞ்சனி ஆகியோரின் திருமணம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது,
மணமகன் சதீஷ் எனது குடும்ப உதவியாளர் மட்டும் அல்ல. என் வீட்டிலும் ஒருவராக நாங்கள் மதிக்ககூடிய நபர் ஆவார்.
இன்று தமிழ்நாட்டில் எல்லோரும் அம்மா என ஒருவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அந்த அம்மா செய்த சாதனை எல்லாம், எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படுத்தியது தான். ஏன் சட்டசபையில் கூட மின் தடை ஏற்பட்டது. இது தான் ஜெயலலிதாவின் இரண்டு ஆண்டு கால சாதனை.
நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை அதிகரித்து வருகின்றது. உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சாரத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கூட குறைந்துள்ளது. இதுவும் அம்மா ஆட்சியில் நடைபெற்றுள்ள சாதனை தான் என்றார் கிண்டலாக.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications