தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்-ராஜகோபால் இடமாற்றம்
சென்னை: தமிழக உள்துறைச் செயலாளராக டாக்டர் நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர மேலும் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறைச் செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளராக இருந்த ராஜகோபால் மின் நிதி நிறுவன தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
மின் நிதி நிறுவன தலைவராக இருந்த கிரிஜா வைத்யநாதன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி வருவாய்த் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
வருவாய்த் துறைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை செயலாளராக இருந்த விஜயகுமார் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications