பிரபல கடத்தல் மன்னன் வளத்திக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலம்: சேலம் நகரை கலக்கிய பிரபல ரவுடி வளத்தி குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்துபோட வந்தவர்களை சிலர் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் பெண் உள்பட 6 பேருக்கு சரமாரி வெட்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை பொதுமக்களும், போலீசாரும் தூக்கி சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்பகுதியில் பெரும் பரபரைப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி வளத்திக்குமார் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வளத்திகுமார், முதலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டான்.
வளத்திகுமார் மீது ஏற்கனவே அரிசி கடத்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி , கொலை என மொத்தம் வழக்குகள் 27 உள்ளன. வளத்திகுமாரால் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய துணை கமிஷனர் பாபு, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கே.சி.மஹாலிக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சேலம் கமிஷ்னர் அனுமதி அளித்ததையடுத்து வளத்திக்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
கோவை மத்திய சிறைக்கு இந்த உத்தரவை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் இன்று காலை எடுத்து சென்றனர். இதையடுத்து ரவுடி வளத்திக்குமார் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பான். வளத்திகுமார் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதால் சேலம் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications