கடந்த வாரம் நிலாவில் மோதிய விண்கல்.. 5 டன் டிஎன்டி வெடிகுண்டு அளவுக்கு சேதம்!
ஹூஸ்டன்: கடந்த 17ம் தேதி நிலாவின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி பெரும் அளவிலான தூசியைக் கிளப்பியுள்ளது. இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் தொலைநோக்கிகள் வீடியோ எடுத்துள்ளன.

Mare Imbrium பள்ளத்தாக்கில்...
இந்த விண்கல் மோதலால் உருவான பெரும் வெளிச்சம் பூமியில் இருந்து பார்ப்பவர்களின் வெறும் கண்களுக்கும் தெரிந்துள்ளது.
நிலாவின் Mare Imbrium பள்ளத்தாக்கில் இந்த விண்கல் மோதியபோது உருவான வெளிச்சம் சில வினாடிகள் ஒரு நட்சத்திரத்தைப் போல ஜொலித்துள்ளது.

5 டன் டிஎன்டி வெடிகுண்டு....
இந்த மோதல் நிகழ்ந்தபோது 5 டன் டிஎன்டி வெடிமருந்து வெடித்துச் சிதறியதற்கு இணையான சிதைவும் ஆற்றலும் வெளிப்பட்டதாக நாஸாவின் மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டரின் விஞ்ஞானி ரான் சுக்ஸ் தெரிவித்துள்ளார்.

1.5 அடி அகலம், 40 கிலோ எடை...
இத்தனைக்கும் இந்த விண்கல் 1.5 அடி மட்டுமே அகலம் கொண்டது. 40 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாகும்.

மணிக்கு 56,000 மைல்கள் வேகத்தில்...
ஆனால், இந்த விண்கல் நிலாவின் மீது மோதியபோது அது மணிக்கு 56,000 மைல்கள் வேகத்தில் அதிபயங்கரமாக பறந்து வந்து மோதியுள்ளதால் தான் இந்த மோதலின்போது பெரும் வெளிச்சம் உருவாகியுள்ளது.

விண்கல் பூமிக்குள் நுழைந்தால்...
இது போன்ற சிறிய விண்கல் பூமிக்குள் நுழைந்தால் நமது காற்று மண்டலத்தின் உராய்விலேயே உடைந்து சிதறி எரிந்து போய்விடும். ஆனால், நிலாவில் காற்று மண்டலம் இல்லாததால் முழுமையாக வந்து மோதியுள்ளது இந்த விண்கல்.

சேதம் எவ்வளவு...
இந்த மோதலால் Mare Imbrium பள்ளத்தாக்கில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியின் மீது நாஸாவின் நிலா ஆய்வு செயற்கைக் கோளான Lunar Reconnaissance Orbiter விரைவில் பறக்கவுள்ளது. அப்போது தான் இந்த மோதலால் ஏற்பட்ட சேதத்தின் முழு விவரத்தை நாம் அறிய முடியும் என்கிறது நாஸா.
நிலாவில் மோதில் விண்கல் வீடியோ
<center><iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/L8dXIxZzBMk?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications