மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்

இதுவரை, மேலாடை அணியாமல் சுதந்திரமாகஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வந்தது.
இருந்தபோதும், இந்த கட்டுப்பாடு, அபராதம் இதயெல்லாம் மீறி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களில் மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திடீரென, நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடலாம். அப்படி நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதன் பிண்ணனியில் நடந்தது என்னவென்றால்...
எங்கேயும்...எப்போதும்...
உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தும் ஹோல்லி வேன் வோஸ்ட், நியூயார்க் நகரில் 'சுதந்திரமாக' சுற்றி வந்தபோது அவரை கைது செய்தனர் போலீசார். பின் கோர்ட்டில் வழக்கும் பதிவு செய்தனர்.
இதெல்லாம் தப்பே இல்லைங்க...
இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வக்கீல், '1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று மேற்கோள் காட்டி வாதாடினார்.
உண்மைதான்...
நியாயத்தைப் புரிந்து கொண்ட நியூயார்க் கோர்ட், 'முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்' என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.
அவசர உத்தரவு...
நியூயார்க் நகரில் பணியாற்றும் 34 ஆயிரம் போலீசாருக்கு நகர போலீஸ் தலைமையகம் நேற்று ஓர் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில்,'பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications