ஆகஸ்ட் 17ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் விநியோகம்
சென்னை: 2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 17-ஆம் தேதி முதல் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். பொதுப்பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.
ஆகஸ்டில் தேர்வு
தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும் எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.
ஜூலை 1 கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதி மாலை 5.30 மணி வரை அளிக்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications