பிக்ஸிங்.. பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ்-

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனின் சென்னை வீடுகளில் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.

மெய்யப்பன் அந்த வீடுகளில் இல்லாததால் அவரை நாளை தங்களிடம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் 6வது தொடர் முடிவடைய உள்ள நிலையில் பிக்சிங் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் பல நகரங்களில் பிக்சிங் தரகர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

IPL Spot Fixing: Mumbai police reach Chennai

சிக்கிய வின்து

இதில் புக்கி ரமேஷ் வியாஸ் கொடுத்த தகவலின் நடிகர் வின்து சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பிக்சிங்கில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அவரது செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்த போது சென்னை தொலைபேசி எண்ணுக்கு அதிக முறை அவர் பேசியிருப்பதும் தெரியவநதது. அந்த செல்போன் எண்ணை தேடிய போது மும்பை போலீசாருக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது.

விசாரணை வளையத்தில் சீனிவாசன் மருமகன்

ஏனெனில் அந்த எண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகனும் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியுமான குருநாத் மெய்யப்பன் எண் என்பதுதான்! குருநாத் மெய்யப்பனுடன் பேசியவுடனேயே பிக்ஸிங் தரகர்களிடம் வின்து பேசியதும் தெரியவந்தது. இதனால் குருநாத் மெய்யப்பனுக்கும் பிக்ஸிங்கில் தொடர்பு இருக்கலாமோ என்ற பலத்த சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதனால் விசாரணை வளையத்தில் குருநாத் மெய்யப்பன் கொண்டுவரப்பட்டார்.

சென்னையில் ரெய்டு- விசாரணை

இந்நிலையில் இன்று காலை மும்பை போலீசார் மூவர் சென்னைக்கு வந்தனர். குருநாத் மெய்யப்பன் வீட்டிற்கு விசாரணைக்குச் சென்றனர். ஆனால், அவர் அவரது வீடுகளில் இல்லை.

இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவரது வீட்டில் சம்மனை வழங்கினர் மும்பை போலீசார்.

முன்னதாக ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பாக சீனிவாசனின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதில் உண்மையில்லை என்று பின்னர் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+