மானாமதுரை அருகே படுகை அணைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன், சிறுமி பலி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே படுகை அணைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை அருகே பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லப்பாண்டியின் மகன் திருமுருகன் வயது (9) செல்லப்பாண்டியின் சகோதரர் வீரபாண்டியின் மகள் ஆனந்தவள்ளி வயது (9)ஆகிய இருவரும் வைகை ஆற்றினை கடந்து அத்தை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் தண்ணீர் இருப்பதைப் பார்த்து கை கால்களைக் சென்றனர். இதில் கால் வழுக்கியதில் இருவரும் தவறி தண்ணீருக்குள் விழுந்தனர்.
குழந்தைகளைக் காணாமல் தேடி வந்த போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

வைகை ஆற்றில் படுகை அணை 16 கோடி செலவில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றின் குறுக்கே 25 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அதில் தண்ணீர் ஊற்றெடுத்ததால் ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்திவிட்டு தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் ஏற்பாடு செய்ய சென்று விட்டார். எச்சரிக்கைப் பலகை எதுவும் வைக்கவில்லை. ஆழம் தெரியாமல் அருகே சென்ற குழந்தைகள் அதில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
வைகை ஆற்றின் பாதையை 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருந்தால் உயிர் பலியைத் தடுத்திருக்கலாம்.
குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications