இந்தியாவில் 16 அணுமின் நிலையம் அமைக்க நாங்க ரெடி.. ரசிய தூதர் தகவல்
டெல்லி: இந்தியாவில் 16 அணுமின் நிலையங்களை அமைக்க தங்களது நாடு தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான ரசிய தூதர் அலெக்சாந்தர் எம் கிட்ஸகின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான தூதரகப் பணியில் 25 ஆண்டுகாலம் பணியாற்றியதை முன்னிட்டு அலெக்சாந்தர் எம் கிட்ஸகின் நேற்று ஒரு விழாவை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை நெருங்கிய, முக்கியமான நட்புநாடாக ரசியா கருதுகிறது. கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் வரவேற்கிறேன். மக்களின் நலனுக்காகவும், நாடு நிலையான வளர்ச்சி அடையவும் இந்த அணு மின் நிலையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு உதவ தயாராக இருக்கிறோம்.
நாங்கள் இந்தியாவுக்கு பல உதவிகளைச் செய்துள்ளோம். இந்தியாவின் மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் நாங்கள் அணு எரிபொருளை இரண்டுமுறை வழங்கியுள்ளோம். அணு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியாவுக்கு அளித்துள்ளோம் என்றார் அவர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications