’லகுலிஷ்’ இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் : குஜராத்தில் தொடக்கம்
அகமதாபாத்: இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகமான, ‘லகுலிஷ்' நேற்று குஜராத் முதலமைச்சர் மோடி தலைமையில் அகமதாபாத் அருகே தொடங்கப் பட்டது.
நான்காவது முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, யோகாசன பிரியர். தினமும் தான் யோகா பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், தான் சந்திக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் யோகா பயிற்சியை பரிந்துரை செய்பவர் மோடி.
அந்தளவு யோகா மீது தீரா காதல் கொண்ட மோடி குஜராத்தில் யோகா பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அனுமதி வழங்கினார். அதன்பேரில், அகமதாபாத் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சர்கேஜ்-காந்திநகர் சாலையில் புதிய யோகா பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது.
'லகுலிஷ்' யோகா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்ட அதை நேற்று மோடி திறந்து வைத்தார். தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த பல்கலைக்கழக கட்டிடம். பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் ஐ.கே.ஜடேஜாவுக்கு சொந்தமான டிரஸ்ட் இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
'லகுலிஷ்' பல்கலைக்கழகத்தில் யோகா 3 ஆண்டு பட்டப்படிப்பு ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் வழங்கப்பட இருக்கிறது. பல குறுகிய கால வகுப்புகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தை திறந்து வைத்த மோடி, பின்னர் விழாவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'சிறிது காலத்துக்கு முன், இந்த நவீன காலத்தில் யோகாவைக் குறித்து பேசுவது வீண் வேலை என்று கருதப்பட்டது. ஆனால் இன்று, இந்தியா மட்டுமல்ல, உலகமே யோகாவின் சக்தியை உணர்ந்துள்ளது. ', என தெரிவித்தார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications