உ.பி.யில் 15 வயது சிறுமியை கற்பழித்த முலாயம் கட்சி நிர்வாகியின் மகனுக்கு ஆயுள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி நிர்வாகி பதாஞ்சலி பரத்வாஜின் மகன் வருண் பரத்வாஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் பதாஞ்சலி பரத்வாஜின் மகன் வருண் பரத்வாஜ். அவர் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலபூர் பகுதியில் 15 வயது சிறுமியை கற்பழித்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பதாவ்ன் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.என். திரிபாதி வருணுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்ததோடு அந்த தொகையில் 70,000 ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அளிக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்ப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட அலபூர் காவல் நிலைய அதிகாரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications