பெண்களிடம் சில்மிஷம் செய்த போதை எஸ்ஐ ஆயுதபடைக்கு தூக்கியடிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூரில் நடந்த தேரோட்ட விழாவில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி.
கடையநல்லூர் மார்க்கெட் பகுதி முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவில் தேர் வலம் வந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடையநல்லூர் சிறப்பு எஸ்ஐ ஒருவர் போதையில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்தவர்கள் அவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் அங்கிருந்து வேறொரு பகுதிக்கு சென்ற அவர் அங்கும் பெண்களிடம் சில்மிஷத்தை தொடர்ந்தார். இதை பார்த்த அங்குள்ள மக்கள் எச்சரித்ததோடு மட்டுமின்றி சுற்றி வளைத்து சிறை பிடித்தனர்.
போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர் எஸ்பி விஜேயந்திர பிதாரியிடம் புகார் தெரிவித்தனர்.
கடையநல்லூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட எஸ்பி சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐயை நெல்லைக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதோடு அவரை பாளை ஆயுதபடைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications