பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையாது: திருமாவளவன்

திமுக கூட்டணியில் இருந்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுகவால் உருவாக்கப்பட்ட டெசோ அமைப்பிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினராக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான உறவை திமுக முறித்துக் கொண்ட நிலையில் தொடர்ந்தும் திமுகவுடன் கை கோர்த்து இருக்கிறது விடுதலை சிறுத்தைகள். ஆனால் மரக்காணம் கலவரம் இந்த நிலையை மாற்றியிருக்கிறது.
மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து திமுக, பாமகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியோ அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசி வருகிறது. அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உடல்நிலையை விசாரிக்க திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் அனுப்பி வைக்கப்பட்டார். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் திமுக கூட்டணியில் பாமக இணைவதாக செய்திகள் அடிபடுகின்றனவே என்று கேட்டதற்கு "அடிபடுகின்றன" என்று சொல்லிவிட்டீர்களே என்று சூசகமாக பதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இணையாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பா.ம.க. இணைய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ள அவர், பா.ம.க.வுடன் இணைந்து செயல்பட முடியாத நிலையை அக்கட்சி ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுல்லாமல் 2016 சட்டசபை தேர்தலிலும் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications