யாசின் மாலிக் போன்றவர்களால் தமிழ்நாடு சிதையும்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனின் எச்சரிக்கை

யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி. நம் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்.காஷ்மீரில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த மாணவர்களையும்,இளைஞர்களையும் தூண்டிவிட்டு, ராணுவம் தங்களைத் தற்காத்துக் கொண்டால், இந்திய ராணுவம் அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவிப்பதாக நாடகமாடி வருபவர்.
ஆரம்பித்திலிருந்து மத்திய அரசு முஸ்லீம் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்காக பயங்கர வாதிகளிடம் சலுகைகளைக் காட்டி, மென்மையாக நடந்து கொண்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி இன்று அவர் உள்ளூர் தலைவர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாட்டுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்.
ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை அழிப்பது அவர்களுடைய தந்திரம். ஜனநாயகத்தின் பெயரால் பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடம் கொடுப்பது ஜனநாயகத்தின் கோழைத்தனம். இந்த பயங்கரவாதி இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதாகப் பேசுவது, சில நல்ல தலைவர்களை தன் வலையில் வீழ்த்தத்தான். தேசியத் தலைவர்கள் பயங்கரவாதத்தை நாசூக்காகக் கையாண்டு வளர்த்து விட்டதால், இவர்கள் ஊக்கம் பெற்று வருகிறார்கள்.
இந்த பயங்கரவாதிகள் மாவோயிஸ்ட்களுடன் கைகோத்துக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவப் பயிற்சிகள் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மத்திய அரசின் கண் எதிரிலேயே ஜனநாயகம் சீர்குலைய அனுமதிப்பது வெட்கக் கேடானது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை விமர்சிக்கும் தைரியம் சீமானுக்கு எங்கிருந்து வந்தது?
யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்ற கேள்விகள் எழுகின்றன.
இது தனித் தமிழ்நாடு பிரிவினை விஷம் மீண்டும் ஊன்றப் படவும், இளைஞர்களைத் திசைதிருப்பவும் நடக்கும் நாடகம் என்று விஷயம் அறிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பிரிவினைவாத, பயங்கரவாத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications